சென்னை:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து தமிழக சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளதாக கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015லம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலிதாவின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தமிழகம்த்துடன் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் கூறியது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வும் நடத்தியது.
மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடந்துவரும் நிலை யில், தமிழகத்தில் அரசியல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான இடம்கூட இதுவரை தேர்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில், வழக்கறிஞஙர கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், மதுரை ஐகோர்ட்டு கிளை மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து எய்ம்ஸ் தொடர்பான வழக்க இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை துரிதபடுத்த வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம், தமிழக சுகாதார துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறினார்.
மேலும், பிரதமர் அலுவலகத்தின் கடிதத்தின் நகல், வழக்கு தொடர்ந்துள்ள ரமேசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.