சென்னை: இபிஎஸ் வழக்கு இன்று விசாரணை அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், இன்னும் அதிமுகவின் கொடி, சின்னத்தை பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, அதிமுகவில் ஒற்றைtஹ் தலைமை பிரச்சினை ஏற்பட்ட நிலையில், எடப்பாடி தலைமையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டப்பட்டு, ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட கட்சியின் சட்ட திருத்தம் மற்றும் பொதுக்குழு தீர்மானத்தின்படி, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமை தேர்ந்து எடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது. இருந்தாலு ஓபிஎஸ் தரப்பு இன்னும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிமையியல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “பொதுச் செயலாளர் என என்னை (எடப்பாடி பழனிசாமி) தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித் துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓ. பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாக உள்ளது.எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பிரதான உரிமையியல் வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று (செப் 21) விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.