நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. நாங்குநேரியில் சுமார் 66% வாக்குகள் பதிவான நிலையில், விக்கிரவாண்டியில் 84% வாக்குகள் பதிவாகியிருந்தன. இதனை தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் துவக்கத்தில் இருந்து முன்னிலை வகித்து வந்த அதிமுக வேட்பாளர்கள், திமுக கூட்டணி கட்சிகளிடமிருந்து இரு தொகுதிகளையும் வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளனர்.
நாங்குநேரி தொகுதியை பொருத்தவரை தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றுள்ளார்.
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி – இறுதி நிலவரம்
அதிமுக: 94,562 வாக்குகள்
காங்கிரஸ்: 62,229 வாக்குகள்
நாம் தமிழர்: 2,662 வாக்குகள்
வித்தியாசம்: 32,333 வாக்குகள்
[youtube-feed feed=1]