விழுப்புரம்: சசிகலாவை அதிமுகவில் தலைமை பொறுப்பேற்க தொண்டர்கள் விரும்பவில்லை என்றும், ஓபிஎஸ் , இபிஎஸ், சசிகலா ஆகிய மூவரும் ஊழல்வாதிகள் என்று அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கூறினார்.
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிசாமி தலைமையில் அதிமுக தொண்டர்களுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.சி.பழனிச்சாமி, அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அடிப்படை தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது வெளிவருவதில்லை.
தொண்டர்களின் கருத்துகளை கேட்பது ஜெயலலிதாவிற்கு பிறகு மறைந்து போய் உள்ளதால், தான் அனைத்து தொகுதிகளிக்கும் சென்று தொண்டர்களை சந்தித்து வருவதாகவும், தொண்டர்கள் யார் ஒற்றை தலைமையில் பொறுப்பேற்க வேண்டும் என முடிவு செய்வார்கள் என கூறினார்.
மேலும், அதிமுகவில் தலைமை பொறுப்பை பிடிக்க, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா போன்றவர்களுக்கு இட்யே யுத்தம் நடைபெறுகிறது என்று கூறியவர், இதனால், அதிமுகவை பலவீனப்பட்டுள்ளதால் பாஜக போன்ற கட்சிகள் கால் ஊன்றவும், திமுகவை வலிமை பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதுஎன்றார்.
அதிமுகவில் ஒற்றை தலைமைதான் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறியவர், ஆனால், எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையையாக்க திணிக்க பார்க்கிறார் என்று விமர்சித்தவர், தேசிய அளவில் அதிமுக வளர்ச்சி பெற வேண்டும் என்பது தான் ஜெயலலிதாவிற்கு நோக்கமாக இருந்தது. ஆனால், தற்போது அதிமுக சாதிய பார்வையில் உள்ளது. அதிமுக அடிப்படை உறுப்பினர்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுகிறது என்றார்.
அதிமுக ஒற்றை தலைமை பொதுக்குழு வழக்கில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து, இருவரும் மாறி மாறி மேல் முறையீடு மட்டுமே செய்து வருவதால், கட்சியின் சின்னமும் கொடியும் தேர்தல் ஆணையத்தால் கட்சியின் சின்னம் முடக்க வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவித்தவர். அதிமுகவில் சாதி வாரியாக பிளவு ஏற்படுவதை தடுக்கவே தொண்டர்களை சந்திப்பதாக கூ கூறினார்.
ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியை நம்பி அதிமுக இல்லை என்று கூறியவர், இருவருக்கும் இங்கு தலைமைபொறுப்பேற்க வேண்டிய சுயநலம் தான் உள்ளதாகவும் ஓ பி எஸ் , இபிஎஸ், சசிகலா ஆகிய மூவரும் ஊழல்வாதிகள் என்று விமர்சித்ததுடன், சிறை தண்டனை பெற்ற சசிகலா அதிமுகவின் தலைமை பதவிக்கு வருவதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை என்பது தொண்டர்களின் சந்திப்பின்போது தெரிந்துகொண்டேன்.
இவ்வாறு கூறனிர்.