சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கடந்த 19ந்தேதி தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று கூடுதல் இணைப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 19ந்தேதி வெளியிடப்பட்டது. அதில், மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் நீட் தேர்வை ரத்து, 7 பேர் விடுதலை என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, கூடுதல் இணைப்பு என்ற பெயரில் தற்போது அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில், அதிமுகவின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இணைப்பு தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய தகவல்கள்…‘
1.) சிறப்பு நீர் மேலாண்மை திட்டம், காவிரி கோதாவரி நதிகள் இணைப்பு
2.) ஈழத்தமிழர் கோரிக்கை குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த ஐநா. சபையில் மத்திய அரசு வலியுறுத்தும். ‘ இலங்கை இன படுகொலைக்கு சர்வதேச நீதிமன்றத்தில் முறையான விசாரணை நடத்தப்படவும், இலங்கை ராணுவம் தமிழர்களை அழிப்பதற்கு, திமுக காங்கிரஸ் கூட்டணி செய்த இரகசிய உதவிகளை வெளிக்கொணரவும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
3.) 7 தமிழர்களையும் விடுவிக்க மத்திய அரசை, குடியரசு தலைவரை வலியுறுத்துவோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.