சென்னை: விவசாயிகளுக்கு மழை பாதிப்பு நிவாரணம் வழங்க வலியுறுத்தி 22ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆர்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக, டெல்டா மாவட்டங்களிலும், வேறு சில மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க திமுக அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் தாலுகா அலுவலங்கம் முன்பு 22ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களிலும்,வேறு சில மாவட்டங்களிலும் பருவம் தவறிய பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க விடியா திமுக அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில்,தாலுகா அலுவலங்கங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.