சென்னை:

திமுக – பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணி என்று பாமக தலைவர் ராமதாஸ் புகழ்ந்து பேசி உள்ளார். அதிமுகவையும், எடப்பாடி அரசையும்  சரமாரியாக வசை பாடி வந்த ராமதாஸ், தற்போது தேர்தல் வெற்றிக்காக அரசியல் மாச்சரியங்களை  மறந்து விட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாமக இடையே கூட்டணி  அமைக்கப் பட்டு  ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி பாமகவுக்கு 7 லோக் சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர், பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாமக தலைவர் ராமதாஸ்,

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. – பா.ம.க. இடையே கூட்டணி உடன்பாடு எற்பட்டுள்ளது. அதிமுக – பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணி. இந்த கூட்டணி  மாபெரும் வெற்றிக் கூட்டணியாக உருவாகும் என்றும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும்  வெற்றிபெறும் என ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள   21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் போது அ.தி.மு.க.வுக்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்த ராமதாஸ், தமிழக அரசுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதன்படி,

காவிரி ஆற்று பகுதிகளில் வேளாண் மண்டலங்கள் அமைப்பது,

காவிரி – கோதாவரியில் 20 நீர் பாசன திட்டங்களை செயல்படுத்துவது,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்வது,

முழுமையான மது விலக்கை படிப்படியாக அமல்படுத்துவது,

மணல் குவாரிகளை மூடுவது,

அரசு ஊழியர்கள் ஊதிய கோரிக்கை விவகாரத்தை தீர்த்து வைப்பது,

மேகதாது அணையை தடுத்து நிறுத்துவது,

பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்குக் கொடுக்கும் கடனை அதிகரிப்பது,

ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்,

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு பெறுவது 

உள்பட 10 கோரிக்கைகளை முன்வைத்து அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை பா.ம.க. மேற்கொண்டது என்றும், தங்களது கோரிக்கைகளை அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தங்களது  கூட்டணி மக்கள் நல கூட்டணி, இது மெகா கூட்டணியாக அமையும்  என்றவர், பாமக  எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

ஏற்கனவே அதிமுகவை சரமாரியாக வசை பாடி வந்த பாமக தலைவர் ராமதாஸ், கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திமுக அதிமுக வுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று சூளுரைத்திருந்த தும், எடப்பாடி அரசை பினாமி அரசு என்று கூறியதும் அனைவரும் அறிந்ததே.

ஆனால், தற்போது தனது மகனை தேர்தலில் வெற்றி பெற வைக்கும் முனைப்பில்,  இரு திராவிட கட்சிகளுடன் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி வந்ததும், இதில், அதிமுக 2  சீட் அதிகமாக கொடுத்தவுடன், அவர்க ளுடன் கூட்டணி சேர்ந்த நிலையில்,  அதிமுக பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணி என்று புகழ்ந்து வருகிறார்.