சென்னை:
திமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து ஈபிஎஸ் – ஒபிஎஸ் இருதரப்பினரும், அதிகாரிகள் முன்பு வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருவாய்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக, அதிமுக அலுவலகத்தில் உள்அறைக்கு சீல் வைத்த வருவாய்த்துறை, தற்போது நுழைவு வாயிலுக்கும் சீல் வைத்துள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக நுழைவு வாயிலுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்நிலையில், அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து ஈபிஎஸ் – ஒபிஎஸ் இருதரப்பினரும், அதிகாரிகள் முன்பு வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருவாய்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.