சென்னை: 234 தொகுதிகளிலும் அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும், கடந்த 5 வருடங்களாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்று தற்போது விலகிய கருணாஸ் ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.
அதிமுக, திமுக என மாறி ஆதரவு கொடுத்த கருணாஸ், தற்போது எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு கொடுக்காமல், தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் உள்ளார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி போட்டியிடவில்லை என அறிவித்ததுடன், 234 தொகுதிகளிலும் அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும், . 234 தொகுதிகளிலும் அதிமுகவை தோற்கடிக்க பணியாற்ற வேண்டும் என்று எங்கள் கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நடிகர் கருணாஸ், பின்னர் திமுகவுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறினார். ஆனால், அங்கும் கண்டுகொள்ளப்படாத நிலையில், வாபஸ் திரும்ப பெற்றார். இந்த நிலையில், தற்போது தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து உள்ளார்.