ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கக்கோரி, தமிழகம் மட்டுமின்றி உலகில் தமிழர் வாழுமிடங்களில் எல்லாம் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளை தமிழகத்தில் முழு அடைப்பு நடக்க இருக்கிறது. அலங்காநல்லூரிலும், சென்னை மெரினாவிலும் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்ித இளைஞர்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று டில்லி சென்று பிரதமரை சந்தித்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். “ஜல்லி்க்கட்டு குறித்த வழக்கு உச்ச நீதமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசு ஏதும் செய்ய இயலாது” என்று மோடி சொல்லிவிட்டார்.
அதே நேரம் மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல், “ஜல்லிக்கட்டு குறித்து மாநில அரசே அவசர சட்டம் இயற்றலாம்” என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், இன்று சென்னை திரும்ப வேண்டிய பன்னீர்செல்வம், தொடர்ந்து டில்லியில் தங்கியிருக்கிறார். இரு அமைச்சர்கள் மற்றஉம் முக்கிய அதிகாரிகள் சிலரை உடனடியாக டில்லி வரும்படி அழைத்திருக்கிறார். அவர்களும் விரைந்துள்ளனர்.
அவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, நாளை குடியரசு தலைவரை ஓ.பி.எஸ். சந்திக்க இருப்பதாகவும், பிறகு தமிழக அரசு ஜல்லிக்கட்டு குறித்து அவசர சட்டம் பிறப்பிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆக, நாளை ஜல்லிக்கட்டு குறித்த நல்ல தகவல் வரக்கூடும் என்று பேசப்படுகிறது