
சென்னை:
உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அதிமுக எம்.பி.க்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கர்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. ஆனால், மததிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லையே என்று வினவினர்.
அதற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது,
உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது மத்திய அரசின் இயலாமையை காண்பிக்கிறது என்று கூறிய திருநாவுக்கரசர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அதிமுக எம்பிக்கள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம்தான் முழுமையான தீர்வு எனவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை வலுவிலக்க செய்யும் எந்த குழு அமைத்தாலும், தமிழகத்திற்கு பயனில்லை எனவும் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார்.
[youtube-feed feed=1]