சென்னை,

ரும் ஜனவரி 8ந்தேதி சட்டசபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வருகிற 3ந்தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், சட்டப்பேரவையில் செயல்படுவது குறித்தும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தற்போதைய நிலவரப்படி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் நீங்கலாக, இ.பி.எஸ்-ஓ.பி.எஸ், தலைமையிலான அதிமுகவில், 111 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

[youtube-feed feed=1]