சென்னை:
அதிமுக திட்டங்களை வரவேற்று பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி, தனது பேச்சின் இறுதியில் அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா கிளினிக் ஆகியவை தொடர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதனை சற்று எதிர்பாராத 15-க்கு மேற்பட்ட அதிமுக எம்எல்ஏ.கள், அவர் பேசி முடித்ததும் விஜயதாரணிக்கு பாராட்டு தெரிவித்து நீர்வளத்துறை சார்பாக வழங்கபட்ட ரோஜாப்பூவை கொடுத்து வாழ்த்து கூறினார்.
Patrikai.com official YouTube Channel