கரூர்:

ரூர் பாராளுமன்ற தொகுதி கடந்த சிலநாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அங்கு வாக்காளர் களுக்கு பணம் கொடுக்க வந்த அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளை கண்டதும், பணத்தை வீசிவிட்டு தலைதெறிக்க ஓடினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக கருர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் தொடர்பாக திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், தேர்தல் அலுவலரை திமுக, காங்கிரஸ் கட்சியினர் மிரட்டியதாக புகார் எழுந்தது. இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக கரூர் தொகுதி பரபரப்பாக காணப்படுகிறது. ஏராளமான காவல்துறையினர் உள்பட துணைராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் பகுதியில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய வந்த அதிமுகவினர், அங்கு தேர்தல் அதிகாரிகள் இருப்பதை கண்டதும், கீழே வீசி விட்டு தப்பி ஓடிவின்னர். பணத்தைகைப்பற்றிய தேர்தல் அதிகாரிகள் அதை எடுத்து,  குளித்தலை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், பணத்தை வீசிவிட்டு சென்றது,  கரூர் மாவட்டம் தோகைமலை காவல் எல்லைக்கு உட்பட்ட பாதிரி பட்டியில் அதிமுக ஊராட்சி செயலாளராக இருப்பவர் ராஜேந்திரன் என்பது தெரிய வந்துள்ளது. அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.