சென்னை:
திமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று காலை 10 மணி முதல் தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகிறது. நாளை மறுதினம், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதையடுத்து, வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20ஆம் தேதியும், வேட்பு மனு திரும்பப் பெறுதல் மார்ச் 21ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாக்குப்பதிவு மார்ச் 26ஆம் தேதியும், மார்ச் 27ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பு சம்பிரதாயம் என்றும், போட்டியின்றி எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வாவார் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.