சென்னை:
அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று காலை 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இன்று காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் , நடைபெற உள்ள நிலையில், 9 மணிக்கு பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
Patrikai.com official YouTube Channel