சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், அதிமுக தொண்டர்கள்  ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில்  வானகரத்துக்கு வந்துகொண்டிருப்பதால், வானகரம், மதுரவாயல் மற்றும் கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரில் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், பணிக்கு செல்வோர் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒற்றை தலைமை விவகாரம் மற்றும் நீதிமன்றத்தில் தீர்ப்பு காரணமாக இன்றைய அதிமுக பொதுக்குழு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.  இதைத்தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் நோக்கி சாரை சாரையாக வாகனங்களில் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் மதுரவாயல் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்களில் கட்சியினர் வருவதால், ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நெரிசலில் சிக்கி ஊர்ந்து வருகின்றன.

இதனால், அந்த பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் மற்றும் பணிகளுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

[youtube-feed feed=1]