புதுடெல்லி:
திமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து இபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்ததில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அதில் பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பினர் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதன் மீதான வாதங்கள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.