சென்னை: தமிழக பாரதியஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை தொடர்பான வீடியோ விளம்பரத்தில், எம்ஜிஆர் படத்தை காட்சிப்படுத்தி ஆதரவு கோருகிறது. இதற்கு அதிமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்தி அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பாரதிய ஜனதா கட்சி தனது வரம்பை மீறுகிறது என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
தமிழகத்தில் பாரதியஜனதா கட்சியை வளர்ச்சி எம்ஜிஆரை உபயோகப்படுத்துவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடம் ஆதரவு பெறும் வகையில் பாரதியஜனதா கட்சியில் தலைவர்கள் யாரும் இல்லையோ… ‘எம்.ஜி.ஆரின் படத்தைப் பயன்படுத்தும் அளவுக்கு அந்த கட்சியில் தலைவர்கள் மிகக் குறைவு?’ என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற முயற்சித்து வருகிறது. இதற்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலில் பங்கேற்று வருகிறது. ஆனால், தமிழக மக்களோ, பாஜகவை ஓட ஓட விரட்டியடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்படியும், சட்டமன்றத்தில் கால்பதிக்க வேண்டும் என்ற பேராசையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் வெற்றிவேல் யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்தது. இதற்கு தமிழகஅரசு தடை போட்ட நிலையில், தடையை மீறி யாத்திரை நடைபெறும் என அறிவித்து, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்களை அனைவரையும் கைது செய்தது காவல்துறை.
இதற்கிடையில், கட்சியின் வெற்றிவேல் யாத்திரையை ஊக்குவிப்பதற்காக தமிழக பாஜக வெளியிட்டுள்ள வீடியோ அதிமுக தலைவர்ளிடையே எரிச்சலை ஏற்படுத்திஉள்ளது.
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அதிமுகவை தரவரிசைப்படுத்தியுள்ளார். அத்துடன் அந்த விளம்பர வீடியோவில், எம்.ஜி.ஆர் திரைப்படத்தின் ஒரு பாடலைப் போலவே உருவாக்கி, பண்ணை நிலத்தில் ஒரு டிராக்டர் சவாரி செய்யும் பல காட்சிகளைக் கொண்டுள்ளது.
இதை காணும் அதிமுகவினர், பாஜக மீது கொலைவெறியில் உள்ளனர்.
இதுரகுறித்து அதிமுக தரப்பில் கண்டனத்தை பதிவு செய்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, எம்.ஜி.ஆரின் காட்சிகளை பாஜக பயன்படுத்தி உள்ளதை கடுமையாக எதிர்த்தார். “நமது திராவிட சித்தாந்தமும் இயக்கமும் வேறு. அவர்களின் [பிஜேபியின்] சித்தாந்தம் வேறுபட்டது. எங்கள் தலைவரின் காட்சிகள் மற்றும் படங்களை அவர்களின் கட்சி வளர பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் கண்டிக்கத்தக்கது, ”என்று ஆவேசமாக வறினார்.
எம்.ஜி.ஆர் தான் தமிழ்நாட்டில் மறுக்கமுடியாத தலைவர் என்பதை பாஜக ஏற்றுக்கொண்டது என்பதை அந்த வீடியோ நிரூபித்துள்ளது. இருந்தாலும், “எங்கள் தலைவர், புரட்சி தலைவரின் புகழ் மற்றும் மரபு AIADMK மற்றும் எங்கள் பணியாளர்களுக்கு மட்டுமே சொந்தமானது. எந்தவொரு கட்சிக்கும் உரிமை கோருவதற்கான தார்மீக உரிமை மற்ற கட்சிகளுக்கு இல்லை, ”என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவுக்கு நல்லாட்சி வழங்கிய தலைவர்கள் குறைவாக இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பியவர், அவர்கள் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நினைத்தால், எம்.ஜி.ஆரின் சாதனைகளைப் பயன்படுத்த வேண்டும்.
எம்.ஜி.ஆருடன் இணைத்து தமிழக பாஜக மாநிலதலைவர் முருகனின் காட்சிகளை ஒப்பிட்டுள்ளீர்களே, இது கண்டனத்துக்கு உரியது, நீங்கள் யாருடன் யாரை ஒப்பிடுகிறீர்கள்? இதுபோன்ற ஒப்பீடுகளுக்கு ஒரு வரம்பு உள்ளது. “எம்.ஜி.ஆர் ஒரு பாரத் ரத்னா. மக்கள் இன்னும் அவரை கடவுளைப் போலவே பார்க்கிறார்கள். நீங்கள் உங்களை வரம்பை மீறுகிறீர்கள் என்று கொந்தளித்துள்ளார்.
அதிமுகவின் எதிர்ப்பு குறித்து கருத்துதெரிவித்துள்ள பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், தமிழகத்தில் காமராஜைப் போலவே எம்.ஜி.ஆரும் தனது நல்லாட்சிக்கு பெயர் பெற்றவர் அதனால் அவரை பயன்படுத்தினோம். “எம்.ஜி.ஆர் ஒரு தலைவராக இருந்தார், அவர் தனது ஆட்சிக்கு முதலமைச்சராக நல்ல பெயரைப் பெற்றார். அதைத்தான் மாநில பாஜக காமராஜையும், எம்.ஜி.ஆரையும் மேற்கோள் காட்டுகிறார்கள். இதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக எம்ஜிஆருக்கு காவி பூசிய பாஜகவினர்… அதிமுகவினர் கொந்தளிப்பு