சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15ந்தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற வுள்ளது. வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் காலை 10 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், இதில் கலந்துகொள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கடிதத்துடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Patrikai.com official YouTube Channel