சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் எதிர்த்து கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெ.மறைவை தொடர்ந்து, அதிமுக எடப்பாடி, ஓபிஎஸ் அணி என சிதறியது. பின்னர் இரு அணி களும் ஒன்றிணைந்து, அதிமுக பொதுக்குழுவை கூட்டி, அதிமுக  விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை நீக்கினர். இந்த நிலையில்,  காவிரி விவகாரத்தில் மத்தியஅரசின் நடவடிக்கைக்கு எதிராக குரல்  கொடுத்த அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமியை அதிமுகவில் இருந்து நீக்கி ஒபிஎஸ், இபிஎஸ் தலைமை கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் மற்றும் உள்கட்சி தேர்தல் தேதியை அதிமுக தலைமை அறிவித்து, ஒருங்கிணைப் பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும் நடத்தி, தேர்வு செய்யப்பட்டனர். இதை எதிர்த்து, கே.பி.பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உறுப்பினர் அல்லாத பட்சத்தில் வழக்கு தொடுக்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தது.