சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக மற்றும் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்  6ந்தேதி நடைபெற உள்ளது. வரும் 12ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்க உள்ளது. இதையடுத்து கூட்டணி கட்சிகள் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக மற்றும் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து நேற்று இரவு முதல் விடிய விடிய ஆலோசனை நடத்தியது. இதில் முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகள் இன்று வெளியாகும் என நம்பப்படுகிறது. அதைத்தொடர்ந்து அதிமுக தொகுதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதுகுறித்து கூறிய பாமக தலைவர் ஜி.கே.மணி, அதிமுக கூட்டணியில், பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டதாகவும், அதிமுக கூட்டணியில், பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.