டில்லி:
விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.350 ஆக நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவ.,1ம் தேதி வெளியிடப்படுகிறது.
டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது:

விவசாய கூலி தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.350 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. இது சர்வதேச அடிப்படையிலானது.
இது விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக அமைகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவ.,1ம் தேதி வெளியிடப்படும் என்று கூறினார்.
மேலும் அனைத்து பிரிவிலான மற்ற தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.160 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை கொண்டு வரும் முன்பே இதனை அமல்படுத்த மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel