ஆக்ரா:

க்ராவில் கொரோனா நோயாளிகளை சரியாக கவனிக்க தவறிய எஸ் என் மருத்துவ மருத்துவ கல்லூரி முதல்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆக்ராவில் உள்ள எஸ் என் மருத்துவ கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்தவர் டாக்டர் ஜி.கே.அனேஜா. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இவரது கண்காணிப்பில் உள்ள கொரோனா நோயாளிகளை சரியாக கவனிப்பதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் மீது வைக்கப்பட்டது. இதையடுத்து லக்னோவில் உள்ள மருத்துவ கல்வி தலைமையகம் இவரை பணி நீக்கம் செய்துள்ளது.  இதே குற்றச்சாட்டுக்காக எஸ்.என். மருத்துவ கல்லூரியின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.பி. ஜெயினும் மாற்றப்பட்டப்பட்டுள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர் ஜி.கே. அனேஜாவுக்கு பதிலாக கான்பூர் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சஞ்சய் காலாவும், டாக்டர் எஸ்.பி. ஜெயினுக்கு பதிகால டாக்டர் பிபி புஷ்பகரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபு என் சிங், எஸ் என் மருத்துவ கல்லூரியில் நோயாளிகளை கவனிப்பதில் தவறுவது மட்டுமின்றி ஏராளமான முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, அரசு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதாக கூறினார்.

இந்நிலையில், இதே போன்ற புகார்கள் எழுந்ததையடுத்து மதுரா மருத்துவனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷெர் சிங்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆக்ரா மேயர் நவீன் ஜெயின், ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பாரதிய ஜனதா தலைவர் ஜெ பி நட்டாவிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

மேலும் பேசிய அவ்ர், தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுக்கின்றன என்றும், பெரும்பாலன மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாகவும், சில மருத்துவமனைகள் திறந்திருந்தாலும் அவை குறைவான பணியாளர்களுடன் இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கொரோனா பாரிசோதனை செய்ய நீண்ட நேரம் ஆவதுடன், தனிமைபடுத்தல் மையங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் ஜெயின் கூறினார்.