பெங்களூரு:
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வேதனை மற்றும் மரணங்கள் மன்னிக்க முடியாத சோகம் என்று அசிம் பிரேம்ஜி வருத்தம் தெரிவித்து உள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், பல நூறு கிலோ மீட்டர் தூரங்களை சாலை மார்க்கவும், ரயில் தடம் வழியாகவும் பல நுறுபேர் நடந்தும், சைக்கிளிலும் சென்றுகொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் விபத்துக்களால் உயரிழந்து வரும் சோகங்களும் அரங்கேறி வருகின்றன.
இரவு பகல் பாராதும், வெயிலையும் பொருட்படுத்தாது, உண்ண உணவின்றி அவர்கள் அல்லல் பட்டு செல்லும் காட்சிகள் மக்களிடையே வேதனையையும், மத்திய மாநில ஆட்சியாளர்கள் மீது எரிச்சலையும் ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விப்ரோ நிறுவனர் அசீம் ப்ரேம்ஜி, புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரிழப்புகளும், வலிகளும் மன்னிக்கமுடியாத கொடூரம் என கடுமையாக விமர்சித்து உள்ளார்.
தொழிலாளர் சட்டங்களில் மாநில அரசுகள் ஏற்படுத்தும் மாற்றங்கள் தொழிலாளர் பாதுகாப்புக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளவர், புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும், விவசாயி களுக்காகவும் அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் நிவாரணத் தொகுப்பு குறித்து, “ஊரக வேலை வாய்ப்பை விரிவுபடுத்துவது மிக முக்கியமான நகர்வாக இருக்கும். ஆனால், பொது விநியோகம் மூலமாக, மேலும் 6 மாதங்களுக்கு உணவு தானியங்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு எண்ணெய், உப்பு, மசாலா, சானிட்டரி நாப்கின்கள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும் என்று ம் வலியுத்தி உள்ளார். மேலும் அவர்களின் செலவுக்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு 7000 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக விப்ரோ நிறுவன முன்னாள் தலைவர் அசிம்பிரேம்ஜி அறக்கட்டளை சார்பில், 1,125 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.