சென்னை:

தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் இன்று நிருபர்களிடம் பேசுகையில், ‘‘மத்திய அரசின் ஜி.எஸ்.டி. விதிப்பால் என்ன நடக்க போகிறது என்று கூற முடியவில்லை. மாநில அரசு வரியுடன் 60 சதவீதத்திற்கும் மேலாக வரி செலுத்த வேண்டியுள்ளது.

இதில் எவ்வாறு லாபம் கிடைக்கும். ஏற்கனவே நலிந்து கொண்டிருக்கும் சினிமா தொழில் முழுமையாக இறந்து விடுமோ என்று அஞ்சுகிறோம்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘என்ன விலை நிர்ணயிக்க வேண்டும் என்று இன்னும் தெளிவாக ஏதும் தெரியவில்லை. நாங்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் மாநில அரசும் தங்களின் வரி குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.

இதனால் நல்ல முடிவு ஏற்பட வேண்டும். இல்லையெனில் தமிழக அரசின் கேளிக்கை வரியை எதிர்த்து வரும் 3ம் தேதி முதல் தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.