தோஹா:

அமெரிக்காவும், கத்தாரும் தீவிரவாதத்தை எதிர்க்க உடன்பாடு மேற்கொண்டுள்ளன.

கத்தாரின் அண்டை நாடுகள் அதன் மீது தொடர்ச்சியாக தடைகளை விதித்துள்ள நிலையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது குறிபிடத்தக்கதாகும். அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சனும் கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகம்மது அல் தானியும் இது தொடர்பான அறிவிப்பை தோஹாவில் வெளியிட்டனர்.

இது குறித்து பேசிய டில்லர்சன் இந்த உடன்படிக்கை கடந்த மே மாதம் ரியாத்தில் நடந்த உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார். அதன் நோக்கம் புவியிலிருந்து தீவிரவாதத்தைத் துடைத்தெறிவதேயாகும். அமெரிக்க அதிபரின் வலுவான நோக்கங்களுக்கேற்ப இது போன்ற செயல்பாடுகள் பல்வேறு முனைகளில் நடைபெறும்” என்றும் அவர் கூறினார்.

கத்தாரின் அமைச்சர் ஷேக் முகம்மது கூறும்போது கத்தாரே அப்பிரதேசத்தில் முதலாவதாக இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தீவிரவாத எதிர்ப்பு நிதி தொடர்பானது. ‘‘கத்தாரை பின்பற்றி அதன் மீது குறைகூறும் வரும் நாடுகளும் இந்த இருதரப்பு உடன்படிக்கையை அமெரிக்காவுடன் செய்து கொள்ள வேண்டும்’’ என்றார்.