சென்னை:
ருநாட்களுக்கு முன் சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவியர் பரிதாபமாக பலியான நிலையில் இன்று தண்ணீர் லாரி மோதி ஒருவர் படுகாயமடைந்தார்.
இரு நாட்களுக்கு முன் சென்னை கிண்டி பகுதியில், தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதி, மூன்று கல்லூரி மாணவிகள் பரிதாபமாக மரணமடைந்தன. மேலும் நால்வருக்கு படுகாயம் ஏற்பட்டது.

காயமடைந்த இளைஞர்
காயமடைந்த இளைஞர்

இந்த சம்பவம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
தண்ணீர் லாரிகளை இயக்குவதில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்களில் எத்தனை பேர் பலியாகி உள்ளனர்? அந்த சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன? என்பன போன்ற விவரங்களை தாக்கல் செய்யுமாறு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரி
விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரி

இந்த நிலையில் இன்று காலை, பள்ளிக்கரணை காவல் நிலையம் அருகே அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார். உயிருக்குப்போராடிக்கொண்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமை ஆணையம் தண்ணீர் லாரிகள் குறித்து விவரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில் மேலும் ஒரு விபத்து ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.