டில்லி
வரும் மார்ச் ௨௭ ஆம் தேதி முதல் இந்தியாவில் மீண்டும் சர்வதேச விமானச் சேவை தொடங்க உள்ளது
இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டார். அதே ஆண்டு மார்ச்23 ஆம் தேதி முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் விமானச் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பிறகு கொரோனா பரவல் சற்றே குறைந்ததால் உள்ளூர் விமானச் சேவைகள் தொடங்கப்பட்ட போதிலும் சர்வதேச விமானச் சேவை தொடங்கவில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் ஏர் பப்பிள் முறையில் ஒரு சில நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமானச் சேவை தொடங்கப்பட்டது. ஆயினும் மொத்தமாகச் சர்வதேச விமானச் சேவைக்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கப்படவில்லை. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன.
இதையொட்டி வரும் மார்ச் 27 ஆம் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச விமானச் சேவை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சக வழிகாஅட்டுதல்களிஅ பின்பற்றி சர்வதேச விமானச் சேவை வரும் மார்ச் 27 முதல் தொடங்க உள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் சரவதேச விமானச் சேவை தொடங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.