துபாய்
ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கபட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது. சுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவ்துடன் இடி, மின்னல் ஆகியவையும் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய கூடும் என எச்சரித்துள்ளதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அனைத்து குடியிருப்புவாசிகளும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது துறை மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரிவோர் வீட்டில் இருந்து பணிபுரியும்படியும் கூறப்பட்டு உள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக்காக அவர்கள் ஆன்லைன் வழி கல்வியை பெறவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இங்குள்ள பூங்காக்கள், பீச்சுகள் ஆகியவை தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டு உள்ளன.
யாரும் தேவையின்றி வாகன பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஆங்காங்கே நீர் தேங்கி காணப்படும் சூழலில், விபத்துகளை குறைக்கும் நோக்கில் சில சாலைகள் மூடப்பட்டன.
மேலும் நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன நேற்று இரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியத்ஹால் துபாயில் மழைப்பொழிவு அதிகரித்தது. மேலும் அதிகாலை 2.35 மணியளவில் இடி, மின்னலும் ஏற்பட்டதால்ல், அவசரகால சேவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
கடந்த 1949 ஆம் ஆடுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏப்ரலில் அதிக அளவில் கனமழை பொழிந்துள்ளது என பதிவானது. எனவே சர்வதேச போக்குவரத்து அதிகம் நடைபெற கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விமான சேவை ரத்து, காலதாமதம் என பயணிகள் அதிக இடையூறுகளை எதிர்கொண்டனர்.
துபாய் மால், அமீரக மால் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. னேக்ய்ன் துபாயின் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வெள்ள நீர் புகுந்தது. பஹ்ரைன் மற்றும் ஓமனிலும் புயலால் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் மீண்டும் கனமழை பெய்து வருகிறது எனினும். கடந்த மாதம் ஏற்பட்ட அளவுக்கு பாதிப்புகள் இருக்காது என கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]