லஹால் ஸ்பிட்டி
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது,
நேற்றுறு காலை 9.45 மணிக்கு இமாசல பிரதேசத்தில் உள்ள லஹால்-ஸ்பிட்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் அந்த மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கமாகும். நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அங்கு உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. லஹால்-ஸ்பிட்டி மாவட்டம் 4 ஆம் நில அதிர்வு மண்டலத்திற்குள் உள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.