கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்து திரையரங்குகள் திறந்தவுடன், தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கடும் பனிப்போர் நடைபெற்று வருகிறது.
30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்ற கடிதம் கொடுத்தால் மட்டுமே, திரையரங்குகள் ஒதுக்குவோம் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் முடிவுடன் இருக்கிறார்கள். இதற்குத் தயாரிப்பாளர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் வி.பி.எஃப் கட்டணம் கட்ட முடியாது மற்றும் 30 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்ற கடிதம் கொடுக்க இயலாது எனத் தங்களுடைய முடிவுகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையாத பட்சத்தில், மீண்டும் ஒரு ஸ்டிரைக்கை தமிழ் சினிமா சந்திக்கும் எனத் தெரிகிறது. மேலும், வி.பி.எஃப் கட்டணக் குறைப்பு நடைமுறை என்பது மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும்.