ராம்குமாருக்கு தையல் பிரிச்சாச்சு.. சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாருக்கு தொண்டையில் போடப்பட்டிருந்த தையல் பிரிக்கப்பட்டு விட்டது. அவர் முழுமையாக குணமடைந்து விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
🌴சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: ராம்குமாரின் தந்தை, வழக்கறிஞர் பேட்டி சுவாதி கொலையில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார். இவரது தந்தை பரமசிவத்தை நெல்லை மாவட்டம், மீனாட்சிப்புரத்தில் சந்தித்தனர் ராம்குமாரின் வழக்கறிஞர்கள் ராம்ராஜ், ரவீந்திரன்.
:ஓட்டுநர் ராஜா குடும்பத்தினரை திருவண்ணாமலை மாவட்ட மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் ராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்கட்சிகளின் தொடர் அமளி: மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விவகாரங்களை எழுப்பி சபாநாயரை முற்றுகையிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
🌴 வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பின்னர் அவர்களோடு ராம்குமாரின் தந்தை இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எனது மகன் ராம்குமார், தனக்கு தானே கழுத்தை அறுத்துக்கொள்ளவில்லை. போலீசார்தான் செய்திருக்க வேண்டும் என்கிற சந்தேகம் எனக்கு உள்ளது. ராம்குமார் பிடிபட்டத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் நாங்கள், சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார்.
🌴பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் தாம் ஒரு காங்கிரஸ் தொண்டன்: இளங்கோவன் பேட்டி
🌴துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, பிரான்சின் நீஸ் நகரத் தீவிரவாதத் தாக்குதல் ஆகியவற்றின் பிந்தைய நிலைமைகளை கலந்தாய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் விரைவில் பிரஸல்ஸில் கூட்டம் நடத்தவுள்ளனர்.
🌴தேனிக்கள் கொட்டத் தொடங்கியதால், எக்வடார் நாட்டில் நடந்து கொண்டிருந்த கால்பந்துப் போட்டி ஒன்று இடைநிறுத்தப்பட்டது
🌴அமெரிக்காவின் பேட்டன் ரூஜ் நகரில் மூன்று போலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் காவல்துறையினரால் நடத்தப்படும் விதம் குறித்து புகார் தெரிவித்தும், தங்களின் இனத்திற்காக தியாகங்கள் செய்ய கறுப்பு இனத்தவருக்கு அழைப்புவிடுத்தும் ஒளிப்படச் செய்திகளை பதிவேற்றியிருக்கிறார்.
🌴அமெரிக்காவின் பேட்டன் ரூஜ் நகரில் ஞாயிறன்று மூன்று போலிஸ் அதிகாரிகள் கறுப்பினத்தவர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து , அதிபர் ஒபாமா கட்டுப்பாட்டைக் கோரியுள்ளார்.
உலகின் மிக சக்தி வாய்ந்த விண் நோக்கியாக ( டெலெஸ்கோப்) உருவெடுக்கவிருக்கும் டெலஸ்கோப் அனுப்பிய புதிய படங்கள் பிரபஞ்சத்தின் ஒரு சிறு மூலையில் 1,300 புதிய நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாகக் காட்டுகின்றன.
திய போக்கிமான் கோ விளையாட்டு உலகளாவிய நிகழ்வாக ஆனது. இந்த ஸ்மார்ட்போன் விளையாட்டு விளையாடுபவர்கள் ஜி.பி.எஸ் மூலம் போக்கிமான் இடத்தைக் கண்டுபிடித்து, அதை பயிற்றுவித்து, சண்டையில் ஈடுபடுத்த முடியும். ஆனால் இது சர்ச்சைக்குரியதாக நிரூபணமாகியுள்ளது
🌴சுவாதி விவகாரம்; திருமாவளவன் மீது வழக்கு தொடரப்படும்: எச்.ராஜா கொந்தளிப்பு!
🌴விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும், ஷேர் ஆட்டோக்களை டிராபிக் ராமசாமி தடுத்து நிறுத்தியதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
🌴மங்களூரின் திருமணமாகி 6 மாதங்களே ஆன பெண்ணின் உடை மாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை எடுத்தது அவரின் மாமனார்தான் என்பது அதில் மேலும் அதிர்ச்சிக்குறிய செய்தியாகும்.
🌴அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு எதிராக பெண்கள் நிர்வாணமாக போராட்டம் செய்து வருகின்றனர்
🌴தமிழக சட்டப்பேரவையிலிருந்து இனிமேல், திமுக வெளிநடப்பு செய்யாது என்று திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
🌴பாடி மேம்பாலம் அருகே94 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசுக்கு சொந்தமான காலி இடத்தில், ‘அம்மா’ திரையரங்கம் அமைக்கப்படும் என மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
🌴ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த நாகபூஷணா என்பவர் ஃபேஸ்புக்கில் பெண் போல பேசி பலரிடமும் பல லட்சம் ஏமாற்றியுள்ளார்
🌴வைக்கோல் போரை நம்பலாம், வைகோவை நம்ப முடியாது: டி.ராஜேந்தர் சரவெடி
🌴தே.மு.தி.க.,வில் இருந்து விலகி, மக்கள் தே.மு.தி.க.வை துவங்கி நேற்று தி.மு.க.,வில் இணைந்துள்ள, சந்திரகுமார் தன்னை ஆசை வார்த்தை கூறி தி.மு.க.,விற்கு அழைத்தார் என, தே.மு.தி.க. இலக்கிய அணி துணை செயலாளர் ராஜேந்திரநாத் வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
🌴தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்து தொடர்ந்து ஆபாசமாக மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆபாச மிரட்டல்களின் பின்னணியில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அந்த நடிகரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க நயன்தாரா தரப்பு முடிவு செய்துள்ளதாக பேசப்படுகிறது.
🌴ஆடி கார் மோதி தொழிலாளி உயிரிழந்த வழக்கு: ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
🌴குமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயதாரணி, ஞாயிற்றுக்கிழமை கனியங்காவிளை மற்றும் அதன் சுற்றுப்புரங்களில் நன்றி தெரிவித்தார்.
🌴பெண் தீக்குளிக்க முயற்சி – கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
🌴கோவை: மென்பொருள் நிறுவனத்தில் இளம்பெண் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை
🌴தஞ்சாவூர் – கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது
தஞ்சாவூர் அருகே வருஷநாட்டில்
🌴நடிகர் கமலின் உடல்நிலை தேறியதையடுத்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்
தாடியை ’ஷேவிங்’ செய்யுங்கள் இல்லையெனில் நான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மனைவி மிரட்டியதால் கணவர் ஒருவர் கோர்ட்டை நாடிஉள்ளார்.
🌴ஜம்மு காஷ்மீரில் கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ. முகமது காலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
🌴இளம்பெண் கற்பழித்து கொலை: 2 வாலிபர்களை கட்டி வைத்து அடித்த கிராம மக்கள் ஒருவன் பலி…அமராவதி
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தவுலதேவி கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள்
🌴சுனந்தா புஷ்கர் மரணம்; போலீஸ் விசாரணையில் சசிதரூர் உடன் நெருங்கிய தொடர்பு கிடையாது என மெஹர் தரார் மறுப்பு
🌴இந்திய உள்நாட்டு விமானங்கள் தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டாலும், பயணிகளை ஏற்ற மறுத்தாலோ சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் பயணிகளுக்கு இதுவரை ரூ.4 ஆயிரம் இழப்பீடாக வழங்கி வந்தது. இந்த நிலையில் இந்த இழப்பீட்டை அதிகரித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி இனி உள்நாட்டு விமானங்கள் 2 மணி நேரத்துக்கு முன்னதாக தாமதம் ஆனாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
அதே போல் விதிமுறைகளை மீறி பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுத்தால் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த உத்தரவு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1–ந் தேதி முதல் அமல் ஆகிறது.
முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கோவையில் கேரள நிதி மந்திரி பேட்டி
அரை நிர்வாண கோலத்தில் துருக்கி ராணுவ வீரர்கள் வெளியான புகைப்படம்
கேரளா, ராஜஸ்தான், மேற்குவங்கம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிய 300 நபர்களை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனியில் பெண்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்தி மதுக்கடை போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது. மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய 15 பெண்கள் உள்பட 50 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தது.
மஹாராஷ்டிராவில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் பட்னவிஸ் சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சுவாதி கொலை ஆவணக் கொலையாக இருக்க வாய்ப்புள்ளது என திருமாவளவன் பண்ரூட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். சுவாதி கொலையில் முதலில் சந்தேகத்தை எழுப்பியது வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திதான் எனவும் அவர் கூறியுள்ளார். ஹெச்.ராஜா போன்றவர்கள் எனது கருத்தை திசைதிருப்ப பார்க்கிறார்கள் என திருமாவளவன் தகவல் தெரிவித்துள்ளார்.
🌴மணப்பாறை அருகே துணிக்கடை அதிபர் வீட்டில் 190 சவரன் நகை கொள்ளை
🌴மதுராவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இடிபாடுகளில் இருப்பவர்களை மீட்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மக்களவை நாளை ஒத்திவைத்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். மேலும் உறுப்பினர் தல்பாத் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக 2-ம் ஆண்டு மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர் நீக்கத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் வந்ததையடுத்து பச்சையப்பன் கல்லூரிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சி காரணமாக பருப்பு வகைகளின் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இந்நிலையில், நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை காலம் துவங்க உள்ளதால் பருப்பு விலை மேலும் அதிகரிக்கும் என வேளாண் உற்பத்தி சந்தை கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோ : ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில் அமெரிக்க வாழ் ஐ.டி., நிபுணர்கள் தீவிரமாக பங்கேற்குமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்