ராஜன் மீதான சுவாமியின் ஆத்திர பேச்சுக்குப் பின்னர், 1.1 பில்லியன் டாலர் இந்தியாவில் உள்ள அந்நிய முதலீடு பறந்து சென்றுவிட்டது.
இந்நிலையில் நேற்று புதன்கிழமையன்று  புதியக் குற்றச்சாட்டு ஒன்றை ரிசர்வ் வங்கி மீதும் அதன் கவர்னர் ரகுராம் ராஜன் மீதும் சுமத்தி, சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளார்.  பத்து தொழிற்சாலைகளுக்கு விதியை மீறி அனுமதியளித்தது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புப் பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

swamy on raghuram
ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு கூடாது என தொடர்ந்து துவேசக் கருத்துக்களை சாமி தெரிவித்து வருவதால் முதலீட்டாளர்கள் கடுப்படைந்துள்ளனர். இந்தியாவிர்வு வரவேண்டிய முதலீடுகள் வேறு நாட்டிர்கு செல்வதால் இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவி செப்டம்பர் மாதமே ஒரு முடிவுக்கு வந்தபோது கூட, அவரது நீட்டிப்பு பற்றிய ஊகங்கள் நிறைய வெளிவருகின்றன. அவரது வங்கிச் சீர்திருத்தங்கள் மற்றும் பணவீக்கம்-இலக்கு வைக்கும் நடவடிக்கைகள் ஆகியவை இந்திய பொருளாதாரத்திற்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. பா.ஜ.க வின் ஆபத்தான தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்த மாதம் ராஜன் பணியிலிருந்து விலக்கப்பட வேண்டுமென்று கோரி பிரதமருக்கு இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும்பாலும் சுவாமியின் கடிதங்களை உதறித் தள்ளியிருந்தாலும், அது சந்தையை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகத் தெரிகிறது. சுவாமியின் அறிக்கை வருவதற்கு முன்பு நான்கரை மாதங்களில், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் 22.82 மில்லியன் டாலருக்கு கொள்முதல் செய்துள்ளனர். சுவாமியின் ஆவேச பேச்சுக்குப் பின்னர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்தியக் கடனை விற்றுள்ளனர்.
“ரகுராம் ராஜன் பாதி இந்தியர் தான் எனவே அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாதென சாமி தெரிவித்த கருத்து, அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு இடம்பெயர்ந்துள்ளது (ந்ன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா)