வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய பதிவுகளால் வன்முறையை தூண்டப்பட்டதால், அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் அக்கவுண்டை நிரந்தரமாக தடை செய்த டிவிட்டர் நிறுவனம், தற்போது, டிரம்பின் டிவிட்டர் குழுவினர்களின் அக்கவுண்டுகளையும் தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற வன்முறைக்கு, அதிபர் டிரம்ப், சமூக வலைதளங்ததில் வெளியிட்ட பதிவுகள் மற்றும் வீடியோவே காரணம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது சமூக வலைதள கணக்குகளை தற்காலிகமாக பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் முடக்கின. பின்னர் டிவிட்டர் நிர்வாகம், டிரம்பின் கணக்கை நிரத்தரமாக மூடுவதாக அறிவித்தது.
இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, அதிபர் டிரம்ப் தரப்பில், டிவிட்டர் “சுதந்திரமான பேச்சுக்கு தடை” விதித்துள்ளது என்று குற்றம் சாட்டிய அறிக்கை அவரது குழுவினரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியானது.
இதைத்தொடர்ந்து, அடுத்த சில மணி நேரத்திலேயே, டிரம்பின் டிவிட்டர் குழுவினர்களின் கணக்குகளையும் (eTeamTrup) டிவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது.
டிரம்ப் அதிகாரப்பூர்வ அரசாங்க கணக்கில் @POTUSல் வெளியிட்ட புதிய டிவீட்களையும் சமூக ஊடக தளம் நீக்கியது. அததுடன் டிரம்ப் தடையை மீட்க முயற்சிக்க பயன்படுத்தும் கணக்குகள் நிரந்தர இடைநீக்கத்தையும் அதன் “தடை ஏய்ப்பு” கொள்கைகளின் கீழும் எதிர்கொள்ளக்கூடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் நடவடிக்கை குறித்து விமர்சித்த டிரம்ப், எதிர்காலத்தில் சொந்த சமூக ஊடக தளத்தை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
டிரம்பின் கணக்கு முடக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது மகன் ஜூனியர் டிரம்ப், “அயதுல்லா மற்றும் பல சர்வாதிகார ஆட்சிகள் முழு நாடுகளுக்கும் இனப்படுகொலை மிரட்டல் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களைக் கொன்றாலும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் டிவிட்டர் கணக்குகளை வைத்திருக்கும் போது, டிவிட்டர் கணக்கை முடக்குவதா என கேள்வி எழுப்பி உள்ளார்.