வாஷிங்டன்:  கடந்த 8 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதியை உறுதி செய்துள்ளார். அவர் மார்ச் மாதம் 3வது வாரத்தில் பூமி திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வுமையம் சென்ற  நிலையில், அவர் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில்,  கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19 ஆம் தேதி நாங்கள் பூமிக்கு திரும்ப உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு   ஜூன் மாதம் 5ம் தேதி,  அமெரிக்க விண்வெளித்துறையான நாசா வின் போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்  ஆகியோர் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் ஆய்வுகளை முடித்துக்கொண்டு 10 நாளில் பூமிக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாக,  கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.  அவர்களுக்கு தேவையானவற்றை  நாசா செய்து வருகிறது. மேலும், விண்வெளி நிலையத்தில் சிக்கி  சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ராக்கெட் அனுப்ப உள்ளது என நாசா அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வெண்வெளியில் இருந்தபடியே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  தனியார் ஊடகம் ஒன்று பேட்டி கொடுத்துள்ளனர். அதில், “நாசாவின் க்ரூ-10 விண்கலம் மார்ச் 12 ஆம் தேதி பூமியில் இருந்து ஏவப்படும் என்றும் மார்ச் 19 ஆம் தேதி நாங்கள் பூமிக்கு திரும்புவோம்” என்று தெரிவித்தனர். நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், அதை நிறைவேற்றும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, சுனிதா வில்லியம்சை அழைத்து வந்த,  மார்ச் 12-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் (க்ரூ-10) பூமியில் இருந்து புறப்படுகிறது. அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்துடன் டாக் (இணைப்பு) ஆனதும், அதே விண்கலனில் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புகிறார்.

இப்போது சர்வதேச விண்வெளி மையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் உள்ளார். அவர் அந்த பொறுப்புகளை வேறொருவர் வசம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து விடைபெற உள்ளார். டிராகன் விண்கலன் மூலம் மார்ச் 19-ம் தேதி அன்று அங்கிருந்து அவர் புறப்படுகிறார்.