சென்னை: பாஜகவில் இருந்து ரஜினி கட்சிக்கு போன அர்ஜுனமூர்த்தி. ரஜினி கட்சி தொடங்காததால், தனிக்கட்சி தொடங்கி போனியாகததால், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி இன்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
மாநில பாஜக முன்னாள் அறிவுசார் பிரிவு தலைவர் அர்ஜுனமூர்த்தி, நடிகர் ரஜினி கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தும், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில், ரஜினியுடன் இணைந்தார். ரஜினி அவருக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி அளித்தார். ஆனால், உடல்நிலையை கருத்தில்கொண்டு, ரஜினி கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்ததும், வேறு வழியின்றி இருந்தவர் 2021 பிப்ரவரியில் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.
அதன்படி, இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம் (இமமுக) என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அப்போது, 4துணை முதல்வர் பதவி – மாணவர்களுக்கு பெட்ரோல், இது வேற லெவல் அரசியல், இது தமிழ்நாட்டின் விஸ்வரூப அரசியல், உண்மையான மாற்றத்தின் அரசியல்,தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும் அரசியல், எங்கள் கட்சிக்கு ஜாதி, மதம் இல்லை… ஆணவத்தால் வரும் மதமும் இல்லை…’’ என அதிரடியாக அறிவித்தார். ஆனால், சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அதில் போட்டியிடப்போவதில்லை என்று கூறி பின்வாங்கினர். அவரது கட்சி மக்களிடையே போனியாகவில்லை.
இதனால் சிலகாலம் அமைதியாக இருந்து வந்த அர்ஜூன மூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைந்தார். இன்று மதியம் 1மணி அளவில் தனது ஆதரவாளர்களுடன் பாஜக மாநில தலைமையகமான கமலாலயம் வந்தவர், அங்கு மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து, பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
பாஜகவில் இருந்து ரஜினியிடம் சென்ற அர்ஜுன மூர்த்தி… தலைவருடன் இருக்கிறேன் என டிவிட்டரில் மாற்றம்…