ஸ்தான்புல்

ர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புயலால் கண்ணாடிகள் உடைபட்ட நிலையில் பத்திரமாக இஸ்தான்புல் விமானநிலையத்தில் விமானியால் சமயோசிதமாக தரை இறக்கப்பட்டு அனைவரின் உயிரும் காப்பாற்றப்பட்டது.

டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று சிப்ரஸ் நோக்கி பறந்துக் கொண்டிருந்தது.  அப்போது அடித்த கடும் மழை மற்றும் புயல் காற்றால் விமான ஓட்டியின் முன் இருந்த கண்ணாடி, மற்றும் விமானத்தின் மூக்குப் பகுதி ஆகியவை உடைந்து சிதறின.  விமானியால் வெளியே பார்க்கவும் முடியாத நிலை ஏற்பட்டது.  புயலில் முட்டை அளவில் இருந்த கற்கள் பறந்து வந்து மோதியதால் இந்த கண்ணாடி உடைந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த விமானத்தை செலுத்தி வந்த கேப்டன் அலெக்ஸாண்டர் அகொப்வ் என்பவர் சமயோசிதமாக இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரை இறக்கி அந்த விமானத்தில் இருந்த 127 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தார்.

விமானத்தில் இருந்த அனைவரும் விமானிக்கு புகழாரம் சூட்டினர்.  இது தங்களின் மறு பிறவி என்றும் இந்தப் பிறவியை அளித்தவர் கேப்டன் அலெக்ஸாண்டர் எனவும் புகழ்ந்தனர்.

இந்த விமானம் தரை இறங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக இணைய தளங்களில் பரவி, அங்கும் விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்னம் உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=wCqYBOgfFSE]