டில்லி
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு சந்தேகத்துகுறிய வங்கிக் கணக்கு பரிமாற்றம் 1400% அதிகரித்துள்ளதாக நிதித்துறை புலனாய்வு தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் வருடம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அப்போது நடந்த அனைத்து வங்கி பரிமாற்றங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த சோதனையை நடத்திய நிதித்துறை புலனாய்வு பிரிவு மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு கடந்த 2017-18 ஆம் வருடத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் சுமார் 14 லட்சம் சந்தேகத்துக்குறிய பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது. ”இது கடந்த 2016 ஆம் வருடம் நடந்த பரிமாற்றங்களைப் போல் மும்மடங்கு அதிகமானதாகும். அத்துடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில் நடந்தது போல் 1400% அதிகமாகும்”. என அந்தப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த பிரிவுக்கு இது குறித்த விவரங்களை வருமானவரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ, ஐபி, டீஇஐ, கஸ்டம்ஸ் உள்ளிட்ட பல துறைகளுக்கு அளிக்க மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த பிரிவுக்கு எவ்வித ந்டவடிக்கை எடுக்கவும் அதிகாரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் வருமான வரித்துறை ரூ. 19.627.99 கோடி கருப்பு பணத்தையும் அமலாக்கத் துறை ரூ.984.98 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் கைப்பற்றி உள்ளது. இதை தவிர இந்த பிரிவு கருப்புப் பண குற்றங்கள் பாதி அளவு குறைந்துள்ளதாகவும் த்ரிவித்துள்ளது.