கோவை:

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், இளம்பெண்ணின் (ராஜேஸ்வரி) கால்கள் மீது லாரி ஏறிய நிலையில், அந்த இளம்பெண்ணின் இடதுகால் அகற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் கொந்தளிப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த நவம்பர் 12ம் தேதி அன்று அவிநாசி சாலையில் அதிமுக நிகழ்ச்சிக்காக சாலையோரங்களில் அதிமுக கொடிகள் கம்பங்களில் வரிசையாகக் நட்டப்பட்டிருந்தன. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இளத்பெண் ஒருவர் சென்றுகொண்டிருந்தபோது, கொடிக்கம்பம் ஒன்ற சரிவதைக் கண்டு, அச்சத்துடன் உடனடியாக  வாகனத்தை நிறுத்த முயன்றபோது, சாலையில் விழுந்தார். அபோது பின்னால் வந்த லாரி அந்த இளம்பெண்ணின் கால்மீறி ஏறியது.

இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளம்பெண்ணின் இடதுகாலின் பெரும்பகுதி கடுமையாக சேதம் அடைந்ததால், அதை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.  கோவை அருகே உள்ள நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் இளம் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.