டில்லி

ல நாட்களாக மாற்றம் இன்றி இருந்த பெட்ரொல் மற்றும் டீசல் விலை மீண்டும்  உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை,,இறக்குமதி செலவு, அன்னிய செலாவணியில் மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வ்ழஙகப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் தினசரி எண்ணெய் நிறுவனங்கள் விலையை அறிவித்து வருகின்றன.

கடந்த சில தினங்களாக இந்த விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்தது.  சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.  இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட லிட்டருக்கு 53 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.76.60 க்கு விற்கப்படுகிறது.   இதைப் போல் டீசல் விலை நேற்றைய விலையை விட லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ. 69.25 க்கு விற்கப்படுகிறது.