சென்னை
கடந்த 2 ஆண்டுகளாகச் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேட்டரி வாகனங்கள் மீண்டும் இயங்க தொட/க்கி உள்ளன.
சென்னையில் விமான நிலையத்தில் உள்நாட்டு விமான முனையம் மற்றும் சர்வதேச விமான முனையம் என இரண்டு முனையங்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே பயணிகள் சென்று வர வசதியாக விமான நிலைய நிர்வாகம் தொடர்ந்து 24 மணி நேரமும் பேட்டரி வாகனங்களை இயக்கி வந்தது.
நாடெங்கும் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த பேட்டரி வாகனம் முழுமையாக நிறுத்தப்பட்டது. பிறகு கடந்த ஜனவரி முதல் ஒரு சில பேட்டரி வாகனங்கள் மட்டும் கொரோனா பரிசோதனைக்காக உள்நாட்டு முனையத்தில் இருந்து சர்வதேச முனையம் வரை பயணிகளை ஏற்றிச் செல்ல இயக்கப்பட்டன.
தற்போது கொரோனா தொற்று மிகவும் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேட்ட்ரி வாகனங்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.