சென்னை

சென்னையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைக்கின்றன.  இதற்கு அரசுக்கும் தொடர்பு இல்லை என அரசு பலமுறை கூறி உள்ளது.

ஆனால் ஒவ்வொரு முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இல்லாமல் இருப்பதும் தேர்தல் முடிந்ததும் மீண்டும் உயர்வதும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.  அவ்வகையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாறுதலும் இல்லை.

தேர்தல் முடிந்த  பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது.   கடந்த இரு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.  இந்நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து இன்று ரூ.93.38க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதைப் போல் டீசல் விலை 31 காசுகள் உயர்ந்து இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.85.96 ஆகி உள்ளது.