சென்னை

மீண்டும் 14 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் மிஷ்கின் கதாநாயகானக நடிக்க உள்ளார்.

பிரபல இயக்குனர் மிஷ்கின் “சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன்” போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.  இவர் ‘நத்தலாலா’ என்ற படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அதில் கதாநாயகனாக நடித்துள்ளார் மிஷ்கின் படத்தில் எப்போதும் ஒரு தனித்துவம் உள்ளதால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.

மிஷ்கின் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கிய ‘சைக்கோ’ ப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பிறகு பிசாசு 2 படத்தை இயக்கிய் மிஷ்குன் விஜய் சேதுபதியை வைத்து ‘டிரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபகாலமாக ‘சவரக்கத்தி, மாவீரன், லியோ’ போன்ற சில படங்களில் மிஷ்கின் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்

தற்போது ‘ ஓல்ட் இஸ் கோல்ட்’ என்கிற படத்தில் மிஷ்கின்  கதாநாயகனாக நடிக்க உள்ளார். இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப்பின் உதவி இயக்குனர் கோகுல் என்பவர் இயக்குகிறார். மீண்டும் ‛நந்தலாலா’ படத்திற்கு அப்புறம் 14 வருடங்களுக்கு பிறகு மிஷ்கின் கதாநாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.