காபுல்:

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான பணிகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல இடங்களில் வாக்காளர் பதிவு புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், காபுல் நகரின் தாஷ்-இ பார்சி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இதில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதேபோல் பக்லான் பகுதி வாக்காளர் பதிவு மையத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் பலியாயினர். இரு சம்பவங்களில் காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் தற்போது வரை பொறுப்பேற்கவில்லை.