அபுதாபி: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி.
ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 545 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர், ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 287 ரன்களை மட்டுமே எடுத்து பாலோஆன் பெற்றது.
இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி, 365 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம், ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 108 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
ஜிம்பாப்வே அணியின் சீன் வில்லியம்ஸ் 151 ரன்களை எடுத்து கடைசிவரை நாட்அவுட்டாக இருந்தார். அவருக்கு பக்கபலமாக டொனால்டு திரிபனோ 95 ரன்களை அடித்தார்.
பின்னர், களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை எடுத்து வென்றது. அந்த அணியின் ரஹ்மத் ஷா, 58 ரன்களை அடித்தார். இதன்மூலம், டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.