சென்னை: கூட்டுறவு சங்கங்களில் 5 சரவன் நகைக்கடன் பெற உறுதிமொழிப் பத்திரம் தந்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால், 5சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், நகைக்கடன் தள்ளுபடி செய்தது. ஆனால், அதில் பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டால், ஏராளமானோர் நகைக்கடன் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதுதொடர்பாக ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்த அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகை கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் நகைக்கடன் 48 லட்சத்து 84 ஆயிரத்து 786 பேருக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 35 லட்சத்து 37 ஆயிரத்து 653 பேர் தகுதியானவர்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், 12 லட்சம் பேருக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்த அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களில் 4 ஆயிரத்து 816 கோடி ரூபாய்க்கான நகை கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களில் 5 சரவன் நகைக்கடன் பெற்றவர்கள், உறுதிமொழிப் பத்திரம் தந்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப் படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் 5.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,969 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.