சென்னை: தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பில் தலைநகர் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.  சென்னையில் அடையாறு மண்டலம் முதலிடத்தில் உள்ளது ஆய்வு களில் தெரிய வந்துள்ளது. சென்னையில் நேற்று 6,383 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடையாறு மண்டலத்தில் மட்டும் 6253 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று இரவு 8மணி அளவில் வெளியிட்டட தகவலின்படி மாநிலம் முழுவதும் நேற்று புதிதாக மேலும் 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு,  மொத்தம் பாதிப்பு 31,33,990 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்கு 37,218 பேர் உயிர் இழந்துள்ளனர். அதே வேளையில்,  இதுவரை 28,95,818 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,00,954 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு தலைநகர் சென்னையில் கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்றுகூட  மேலும், 6,383 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுதுடன், சென்னையின் மொத்த பாதிப்பு 6,93,010 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,29,624 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே வேளையில் கொரோனா தொற்றால்  இதுவரை 8,814 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போது, சென்னையில் மட்டும்  54,572 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள மண்டலங்களில் அடையாறு முதலிடத்தில் உள்ளதாக, கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் தெரிவித்து உள்ளார். அடையார் மண்டலத்தில்  6253 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணாநகர் மண்டலத்தில் 5241 பேரும்,  தேனாம்பேட்டை மண்டலத்தில் 5208 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.