டெல்லி:

ருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட வழக்கின் நிர்பயா தாயாரின் சார்பாக இறுதிவரை வாதாடி, அவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கித் தந்த வழக்கறிஞர் சீமா ஷம்ரிதி (Seema Samridhi)க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது…

குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு சட்டச்சிக்கல்களை உருவாக்கிய நிலையிலும், அயராது பாடுபட்டு, சட்ட சிக்கல்களை களைந்து, குற்றவாளிகள் இன்று தூக்கிலேற்றப்படுவதை வரை அயராது உழைத்த பெருமை மிக்கவர் சீமா ஷம்ரிதி.

இந்த தைரியமான வழக்கறிஞர் நிர்பயாவின் வழக்கில் இடைவிடாது போராடி, தண்டனையை நிறைவேற்றினார் . நேற்று நள்ளிரவு நடைபெற்ற விசாரணையின்போதும் ஆஜராகியும், இன்று காலை குற்றவாளிகளை தூக்கில் போடுவது வரை அசராமலும் பயமில்லாமலும்  துணிச்சலாக செயலாற்றினார்…  அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன…

அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், பெண் உரிமை அமைப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன…

இந்த பெண்மணியை பாராட்டுவதில் பத்திரிகை டாட் காம் இணையதளமும் பெருமை கொள்கிறது…. நீங்கள் இல்லாமல்  முடியாது, அது சாத்தியமில்லை .. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மேடம்…  சத்தியமேவ ஜெயதே