டில்லி

ச்சநீதிமன்றத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைக்க கோரி மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்குப் பருவ மழை இந்தியா எங்கும் மழையை அளிக்கிறது.  ஆனால் தென் இந்தியப் பகுதியான தமிழ்நாட்டுக்கு அந்த மழையின் பயன் கிட்டுவதில்லை.    இது குறித்து வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர், “நாடெங்கும் பெய்யும் தென் மேற்கு பருவமழையை தமிழகத்தில் பெய்ய விடாமல் மேற்கு தொடர்ச்சி மலை தடுத்து விடுகிறது.  இதனால் தமிழகத்துக்கு அந்த மழையின் பயன் கிட்டுவதில்லை.   மேகங்களை மேற்கு தொடர்ச்சி மலை தடுத்து விடுவதால் அந்த மழை கேரளாவில் பெய்து வருடந்தோறும் 3000 டி எம் சி நீர் கடலில் கலந்து வீணாகிறது.

இதை தடுத்து நிறுத்தி அந்த நீரை தமிழகத்துக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.   அதற்கு மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தை குறைக்க வேண்டும்.    இதனால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதனால் தென்மேற்கு பருவமழை தமிழகத்துக்கு பலன் அளிக்கும் தமிழகம் அதன் பின் தண்ணீருக்காக மற்ற மாநிலங்களை நாட வேண்டி இருக்காது” என குறிப்பிட்டுள்ளார்.